தெற்கு இத்தாலிய நகரமான நேபிள்ஸ் அருகே நேற்று அதிகாலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் சேதமடைந்தன.
நிலநடுக்கம் ஏற்பட்ட போது அம்மாகாணம் முழுவதும் பயங்கர சத்தத்துடன் அபாய ஒலிகள் தொடர்ந்து ஒலித்ததாகவும், சில இடங்களில் பயங்கர அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் அந்நகரத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.