2025-26 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில் மதுபான முறைகேடு குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.