தமிழ்நாடு அரசு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 2 முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் 2025 -26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை காலை தாக்கல் செய்யப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். சம்பள உயர்வு, பணி உயர்வு தொடர்பான கோரிக்கைகளையும் வைத்திருக்கின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே போராட்டங்களையும் நடத்தியிருக்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.