ஜப்பான் கார் உற்பத்தி நிறுவனமான நிசான் கம்பெனி, நடப்பு நிதியாண்டில் 54 கோடி டாலர் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளது. அதன்காரணமாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி மகோடோ உச்சிடா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தற்போதைய தலைமை திட்டமிடல் அதிகாரி, இவான் எஸ்பினோசா, தலைமை செயல் அதிகாரி பொறுப்பை கவனிப்பார் என்றும் பங்குதாரர்கள் கூட்டம் நடக்கும்வரை பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.