Tuesday, July 1, 2025

தேர்வில் ஆள்மாறாட்டம் : உ.பி., பீகாரை சேர்ந்த 8 பேர் கைது

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் மத்திய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் எம்.டி.எஸ். துறையில் டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு கடந்த மாதம் 8, 9 – ந் தேதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்வில் தமிழகம் மட்டுமின்றி உத்தரபிரதேசம், அரியானா, மத்தியபிர தேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இந்நிலையில் நேற்று நேர்முக தேர்வு நடந்தது. இதில் மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஒரு சிலரின் புகைப்படம் மற்றும் கைரேகை சரிபார்க்கப்பட்டது. அதில் எழுத்து தேர்வு நடந்த போது சேகரித்த கைரேகைக்கும், நேர்முக தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்களிடம் பெறப்பட்ட கைரேகைக்கும் வேறுபாடு இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் 8 பேரும் ஆள் மாறாட்டம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து இதில் ஆள்மாறாட் டம் செய்து தேர்வு எழுதிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிஷிருமார் (வயது 26), பிபன்குமார் (26), பிரசாந்த் சிங் (26), நரேந்திரகுமார் (24), ராஜஸ்தானை சேர்ந்த லோகேஷ் மீனா(24), அசோக்குமார் மீனா (26), அரியா னாவை சேர்ந்த சுப்ராம்(26), பீகாரை சேர்ந்த ராஜன் கார் காண்ட் (21) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news