Wednesday, March 12, 2025

உயிரை பறித்த தீவிர டயட் : கேரள பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநந்தா (18). இவர் கடந்த ஆறு மாதங்களாகவே யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களை பார்த்து தீவிர டயட் உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளார். குறிப்பாக, திட உணவுகள் எடுத்துக்கொள்ளாமல் திரவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அவருக்கு தீவிர உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் சர்க்கரை மற்றும் சோடியம் அளவு வெகுவாக குறைந்து குடல் சுருங்கி போனது. 18 வயது பெண்ணான இவர் வெறும் 24 கிலோ உடல் எடையுடன் மட்டுமே இருந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீநந்தா மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest news