Wednesday, March 12, 2025

கனடா நாட்டின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு

கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதை அடுத்து புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(வயது 53), தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இதையடுத்து அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.இதில் 59 வயதான மார்க் கார்னி 1,31,674 வாக்குகள் பெற்று 85.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி, கடந்த 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் ஆளுநராக பதவி வகித்தார். அதோடு, 2011 முதல் 2018 வரை நிதி நிலைத்தன்மை வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

Latest news