மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் மற்றும் முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையே கடந்த இரண்டு நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டது வருகிறது. இந்த மோதலில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி உயிரிழந்துள்ளனர்.
இதில் 125 பேர் சிரியா அரசு படையைச் சேர்ந்தவர்கள்; 148 பேர் ஆசாத் விசுவாசிகள் அடங்குவர். மீதமுள்ளவர்கள் பொது மக்கள் என, சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.