திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக கண்ணாடி தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்தலாம்.
100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்த உரிமம் பெறுவது கட்டாயமாகும். ரெயில்வே தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரெயில்வேயின் பொறுப்பு. அவற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை அனுமதிக்கக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.