Wednesday, March 12, 2025

வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே கடும் மோதல்

அமெரிக்காவில் அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அதிபர் டிரம்ப் மற்றும் அரசாங்க திறன் துறை தலைவர் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதிபர் டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யவில்லை என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டினார். இதனால் எலான் மஸ்க், மார்கோ ரூபியோ இடையே கடும் வார்த்தை மோதல் எற்பட்டது.

இதையடுத்து நிரூபர்களை சந்தித்த அதிபர் டிரம்ப் “ரூபியோ-எலான் மஸ்க் மோதல் இல்லை. அவர்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

Latest news