Wednesday, March 12, 2025

போப் பிரான்சிஸ் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

Latest news