Friday, May 9, 2025

பிரபல அமெரிக்க பாடகி கார் விபத்தில் உயிரிழப்பு

அமெரிக்காவின் பிரபல ராப் பாடகி ஆங்கி ஸ்டோன் (63) “நோ மோர் ரெயின்”, “மோர் தான் ய வுமன்” போன்ற Hit பாடல்களால் புகழ்பெற்றவர். கிராமி விருதுக்கான பரிந்துரைகள் 3 முறை அவருக்கு கிடைத்துள்ளன.

இந்நிலையில் அலபாமா மாகாணத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு லாரி அவரின் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கி, ஆங்கி ஸ்டோன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மறைவினால் உலகமுழுவதும் உள்ள ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Latest news