Friday, May 9, 2025

திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காலம் நெருங்கிவிட்டது : சி.வி.சண்முகம்

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை அதிகரித்ததுதான், திமுக அரசின் சாதனை என்று சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பயனாளிகளுக்கு ஆடு, மாடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் பேசிய சி.வி.சண்முகம், திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் காலம் நெருங்கிவிட்டதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Latest news