Friday, March 14, 2025

மாணவிக்கு பாலியல் தொல்லை : த.வெ.க நிர்வாகி போக்சோவில் கைது

தர்மபுரி மாவட்டம், கடத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுதாகர், 45. இவர், த.வெ.க.,வில் கடத்துார் நகர பொறுப்பாள-ராக பதவி வகித்து வருகிறார். இவரது உறவினரின், 16 வயது-டைய மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டதால், சுதாகர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதுகுறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுதாகரை கைது செய்த போலீசார் தருமபுரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சுதாகருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Latest news