நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சென்னை வளசரவாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த சீமான், திமுக அரசுக்கு எதிராக தான் வைக்கும் குற்றசாட்டுகளை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாமல், இது பழிவாங்கும் நடவடிக்கை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சீமானின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “சீமானை நாங்கள் தூசு போல சமாளிப்போம். அவருக்கு எதிரான வழக்கின் பின்னணியில் திமுக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீதிமன்றம் கொடுத்த உத்தரவின் பேரில் விசாரணை நடைபெறுகிறது என அவர் கூறியுள்ளார்.