திருவள்ளூர் மாவட்டத்தில் பாமக நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். ..
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் சட்டமும் கிடையாது. சட்ட ஒழுங்கும் கிடையாது. தமிழகத்தில் பெண்கள் எங்கும் பாதுகாப்பாக தனியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. ஐந்து வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. .
தமிழகத்தில் நான் மட்டும் ஆட்சியில் இருந்தால், வேற மாதிரி செய்திருக்க முடியும். அந்த நபர்களை அந்த இடத்தில் வெட்டி இருப்பேன். இப்படி செய்தால் வேறு யாராவது இதுபோல் சம்பவங்களில் ஈடுபடுவார்களா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் மது விற்பனை நடைபெறுகிறது, இதற்கெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம் என அவர் பேசினார்.