சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் எஸ்.வி.சேகர் : தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை என்பதே சரி. சமீபத்தில் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா நாங்கள் இந்தியை திணிக்க மாட்டோம் என்று இந்தியில் தெரிவித்து விட்டு சென்றார்.
மும்மொழிக் கொள்கையை சரியான முறையில் தமிழக முதல்வர் மிக கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறார். அவருக்கு நானும்,அனைவரும் உறுதுணையாக இருப்போம்.
அண்ணாமலை இருக்கும் வரை என்றென்றும் தமிழ்நாட்டில் திமுக-வின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதில் எந்த பிரச்சனையும் இல்லை. திமுக தனியாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டாம். அண்ணாமலையை அனைத்து பகுதிகளில் அனுப்பி வைத்து பேச வைத்தால் திமுகவிற்கு வாக்கு கிடைத்து வெற்றி பெற்றுவிடும் என அவர் பேசியுள்ளார்.