Wednesday, March 12, 2025

பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு : 5 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பு கூறவில்லை. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அகோரா கட்டக்கில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news