சூடானின் தலைநகரான கர்தூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்வானா ராணுவ தளத்தில் இருந்து ராணுவ விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது திடீரென விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது. இதில் 46 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. தொழில்நட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.