Friday, March 14, 2025

மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம் – அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கோழை என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து பேட்டி அளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது; வழக்கிற்கு பயந்து, மத்திய அரசுக்கு மண்டியிடுவது கோழையா? மாநில உரிமைக்காக சவால் விடுவது கோழையா? மாநில உரிமைக்காக நெஞ்சை நிமிர்த்தி மத்திய அரசிற்கு சவால் விடும் முதலமைச்சரை கோழை என்பதா? மாநில உரிமைக்கு குரல் கொடுக்கும் எங்கள் முதல்வர் இரும்பு முதல்வர் என்று கூறியுள்ளார்.

Latest news