Monday, February 24, 2025

காளியம்மாள் திமுகவிற்கு வருவதாக இருந்தால்… – அமைச்சர் சேகர் பாபு சொன்ன தகவல்

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் சேகர் பாபு, நாம் தமிழர் கட்சி காளியம்மாள் திமுகவிற்கு வருவதாக இருந்தால் முடிவை தமிழக முதலமைச்சர் தான் எடுப்பார் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்ட விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, நாம் தமிழர் கட்சி காளியம்மாள் திமுகவிற்கு வருவதாக இருந்தால் முடிவை தமிழக முதலமைச்சர் தான் எடுப்பார் என தெரிவித்தார்.

எத்தனை ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிறுத்தினாலும் திமுக அரசின் பணி தொடரும் எனவும், தமிழ்நாட்டில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் எனவும் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்தார்.

Latest news