கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து வாடிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவர் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு வாடிகன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.