கார் ரேசில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித் குமார், தனது பெயரில் ரேஸிங் கம்பெனியும் நடத்தி வருகிறார். போர்ச்சுகல் நாட்டில் நடந்த ரேசில் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. அதன்பின்னர் துபாயில் நடந்த போட்டியிலும், அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேசில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ள நிலையில், நேற்று அவரது கார் விபத்தில் சிக்கியது. ரேசின் போது, முன்னால் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து குறுக்கே வந்ததால், அஜித்தின் கார் விபத்தில் சிக்கி, 3 முறை பல்டி அடித்தது. இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.