அடையாரில், அரசுப் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை அடையார் அருகே உள்ள அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த 19 ஆம் தேதி பள்ளி முடிந்து பேருந்து நிலையத்துக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் தங்கராஜ், ஆட்டோவை மாணவியின் அருகில் நிறுத்தி மாணவியின் கையை பிடித்து இழுத்தாக தெரிகிறது.
இது குறித்து மாணவி நேற்று தனது வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆட்டோ ஓட்டுநரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. அதனையடுத்து, அவரை போக்சோ சட்டத்தல் கைது சிறையில் அடைத்தனர்.