Thursday, December 25, 2025

119 சீன செயலிகளை தடை செய்த மத்திய அரசு

கடந்த ஜூன் 20, 2020 அன்று, இந்தியா ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளை தடை செய்திருந்தது. தொடர்ச்சியான டிஜிட்டல் முயற்சிகளின் ஒரு பகுதியாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மேலும் செயலிகளை தடை செய்யும் போக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 119 செயலிகளைத் தடை செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதுவரை 15 செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

மீதமுள்ள செயலிகள் விரைவில் அகற்றப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A இன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News