தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,025 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.109 க்கு விற்பனை செய்யப்படுகிறது.