Saturday, December 20, 2025

முழுசா ரூ.6 லட்சம் குளோஸ் : இன்ஸ்டாகிராம் ஜோதிடரை நம்பி ஏமாந்த பெண்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் விஜயகுமார் என்ற ஜோதிடரை தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபரோ, ‘உங்களுக்கு நீங்கள் விரும்பியபடி பெற்றோர் சம்பந்தத்துடன் காதல் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு சில பூஜைகள், சடங்குகள் நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய அந்த பெண் பூஜைக்காக மொத்தம் ரூ.6 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். கடைசியில் தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த அந்தப் பெண், போலி ஜோதிடரிடம் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜோதிடர் பணம் கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன அந்தப் பெண், உடனடியாக பெங்களூரு போலீசில் புகார் கொடுத்தார். தற்போது போலீசார் அந்த போலி ஜோதிடரை தேடி வருகின்றனர்.

Related News

Latest News