அர்ஜென்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவர் தனது X தளத்தில் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்துவதாக கூறி எதிர்ப்புகள் கிளம்பின. முதலீட்டாளர்கள் பலர் தங்களது பணத்தை இழந்த நிலையில், அர்ஜென்டினாவில் உள்ள வழக்கறிஞர்கள் அதிபருக்கு எதிராக மோசடி புகார்களை தாக்கல் செய்தனர்.
இந்த மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தான் நல்லெண்ணத்துடன் செயல்பட்டதாக அதிபர் ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார். இதற்கிடையே நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.