Saturday, February 22, 2025

ஓபிஎஸ் ஒரு கொசு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஒரு காலத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற அதிமுகவை, இன்று இடைத்தேர்தலில்கூட போட்டியிட முடியாத கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என ஓ.பன்னீர் செல்வம் பேசியிருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் : “ ஓ. பன்னீர்செல்வம் ஒரு கொசு. நாட்டில் பல பிரச்னைகள் இருக்கின்றன. அந்தக் கொசுவைப் பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை என்றார். மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய ஜெயக்குமார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும் இருமொழிக் கொள்கையை பின்பற்றுகிறோம். ஹிந்தி மொழித் திணிப்பை தமிழக மக்கள் ஒரு காலத்திலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

Latest news