மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மோடி அரசு எடுத்து வருகிறது. தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி – வேலைவாய்ப்பு – சமூகநீதி – வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது.
தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம், உரக்கக் குரல் எழுப்புவோம், உரிமைகளை மீட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளனர்.