டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்களாகும் நிலையில், முதல்வர் மற்றும் அமைச்சரவை குறித்த அறிவிப்பை பாஜக வெளியிடாமல் உள்ளது.
இதனை விமர்சித்து அதிஷி பேசியதாவது: தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்திட்ட 10 நாள்கள் ஆகிறது. பாஜகவில் டெல்லியை ஆட்சி செய்வதற்கான ஆட்கள் இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது. 48 பேரில் ஒருவரையும் பிரதமர் மோடிக்கு நம்பவில்லை. பாஜகவிடம் தொலைநோக்கு பார்வையோ திட்டமிடலோ இல்லை என அவர் விமர்சித்துள்ளார்.