Wednesday, December 24, 2025

நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ராணிப்பேட்டை காவல் துறையினர் சம்மன்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. பெரியார் குறித்த அவதூறு பேச்சுக்கு எதிராக சீமான் மீது தமிழ் நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

பல காவல் நிலையங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சீமானுக்கு சம்மன் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராக ராணிப்பேட்டை காவல் துறையினர் சீமானுக்கு சம்மன் வழங்கியுள்ளனர்.

Related News

Latest News