Wednesday, March 12, 2025

மார்ச் 31ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறையா? RBI முக்கிய அறிவிப்பு

மார்ச் 31ஆம் தேதியன்று வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டின் கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இதுபோன்ற சூழ்நிலையில், 2024-25 நிதியாண்டின் இறுதிக்குள் அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் முறையாக முடிக்க ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசு பரிவர்த்தனைகளைக் கையாளும் அனைத்து வங்கிகளும் மார்ச் 31 அன்று செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நாளில், வருமான வரி, ஜிஎஸ்டி, சுங்க வரி மற்றும் கலால் வரி போன்ற அரசு சார்ந்த வரிகளை செலுத்த முடியும்.

Latest news