Saturday, February 22, 2025

ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா? இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சை பேச்சு

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். தற்போது இவர் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ரஜினிகாந்த் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் ராம் கோபால் வர்மா அளித்த பேட்டி ஒன்றில் : “ஒரு நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.

Slow Motion மட்டும் இல்லையென்றால் ரஜினியால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. பாதி படம் முழுக்க எதுவும் செய்யாமல் ரஜினி ஸ்லோ மோஷனில் நடப்பதை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

ரஜினியை அவரின் ரசிகர்கள் கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கிறார்கள். அதனால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Latest news