சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வெடிகுண்டு வைத்து, தகர்க்கப்படும் என்று நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி சக்திவேல் ஆகியோர் தலைமையில், போலீசார் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ரயில் நிலையம், இருப்புப் பாதை ஆகியவற்றில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தொலைபேசி அழைப்புகள் எங்கிருந்து வந்தது, மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.