Wednesday, March 12, 2025

97.4 பில்லியன் டாலருக்கு ஓபன் AI நிறுவனத்தை கேட்ட எலான் மஸ்க்

ஓபன் AI நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கு கேட்ட எலான் மஸ்க்கின் விருப்பததை, OPEN AI நிறுவன CEO நிராகரித்துள்ளார்.

கடந்த 2015-ல் ஓபன் ஏஐ நிறுவனம் நிறுவப்பட்ட போது அதன் இணை நிறுவனராக எலான் மஸ்க் இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தன்னிடம் இருக்க வேண்டுமென அவர் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு, எதிர்ப்பு கிளபியதை அடுத்து எலான் மஸ்க் விலகினார். தொடர்ந்து, ஓபன் ஏஐ பாதை மாறி விட்டதாக அவர் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு, ஓபன் ஏஐ நிறுவனத்தை சுமார் 97.4 பில்லியன் டாலருக்கு வாங்க விருப்பம் தெரிவித்தது. இந்த சூழலில், ஓபன் ஏஐ நிறுவனத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல தீவிரம் காட்டி வரும் ஓபன் AI சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன், மஸ்க்கின் இந்த ஆஃபரை நிராகரித்துள்ளார். வேண்டுமானால், 97.4 பில்லியன் டாலருக்கு எக்ஸ் தளத்தை வாங்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest news