ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக, வி.சி.சந்திரகுமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.