மசோதாவை மறுஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பினால் முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருக்கலாமா? என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, அரசியல் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநர் மவுனமாக இருக்கலாமா? என்றும் மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு மவுனமாக இருந்தால் என்ன அர்த்தம்? என்றும் கேள்வி எழுப்பினர்.