சென்னை சத்தியமூர்த்தி பவனில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் அயோத்தியில் படுதோல்வி அடைந்தவர்கள், திருப்பரங்குன்றத்தில் கலகம் செய்ய தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறினார்.
வடமாநிலங்களில் மத அரசியல் தோல்வி அடைந்து வருவதால், திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றுவதற்கும், மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்கும் வெளியில் இருந்து மக்களை கூட்டி வந்து, உள்ளூர் மக்களுக்கு எதிராக பிரச்சினையை கையில் எடுத்திருப்பதாகவும் தமிழக அவர் தெரிவித்தார்.
பாஜகவின் துணையோடு தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்புகள் முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டிய செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் சார்பில் நாளை மதநல்லிணக்க வழிபாடு நடத்தப்போவதாக தெரிவித்தார்.