சென்னை குமரன் நகர் பிள்ளையார் தெருவில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. நேற்று மாலை வாலிபர் ஒருவர் பெரியார் சிலை மீது காலணிகளை வீசியுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்தி விசாரணையில் அவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர் அஜய் என்பது தெரிய வந்தது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப காலமாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வழியில் பேசி வருவதும் அவர் மீது 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.