கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடை வழக்கம்போல் 12 மணிக்கு திறக்க வேண்டிய கடை தற்பொழுது 12.20 க்கு கடையின் முன்பக்கம் உள்ள கேட் திறக்காததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து முன் பக்க கேட்டில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை கூறினர். ஆனாலும் மது பிரியர்கள் 12 மணி ஆகிவிட்டது என்று கை நடுக்கத்துடன் காவல்துறையுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் 12 20க்கு கடை திறக்கப்பட்டவுடன் முண்டியடித்து ஓடிச்சென்று மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றனர்.