Saturday, May 10, 2025

தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு

தெலுங்கானாவில் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பு 50 நாட்கள் நடைபெற்றது.

தெலங்கானா மக்கள் தொகையில் மொத்தம் 56.33% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. வர்களில் முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10.08% பேரும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 46.25% பேரும் பட்டியல் சமூகத்தினர் 17.43% பேரும் பழங்குடியினர் 10.45% பேரும் உள்ளனர்

அம்மாநிலத்தில் மொத்தமாக 50.51% ஆண்கள் மற்றும் 49.45% பெண்கள் உள்ளனர் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Latest news