Monday, February 3, 2025

சுரேஷ் கோபியின் சர்ச்சை பேச்சு : கடும் கண்டனத்தால் வாபஸ் பெற்றார்

டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய சுரேஷ் கோபி, பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தை உயர் வகுப்பினர் மேற்பார்வையிட்டால் மட்டுமே உண்மையான வளர்ச்சி சாத்தியமாகும் எனக் கூறினார்.

பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பழங்குடியினர் நலத்துறைக்கு அமைச்சராக முடியும் என்பது நம் நாட்டின் சாபக்கேடு என பேசினார். இவரது பேச்சுக்கும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், தனது கருத்தை திரும்பப் பெறுவதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். தான் யாரையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேசவில்லை என்றும் தனது கருத்து சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

Latest news