மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இப்படம் வரும் 6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
தற்போது விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ.3 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.