தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு நிறுவனம் அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் மிக இழிவாக நடந்துகொண்டது. அதாவது ஊழியர்கள் கழிவறைக்கு சென்று வர நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக அவர்கள் கழிவறையில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை எடுத்து சுவற்றில் ஒட்டியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானதால் பலரும் அந்த நிறுவனத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதையடுத்து அந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டது.