Tuesday, January 28, 2025

இனி நிதி உதவி கிடையாது : டிரம்ப் போட்ட உத்தரவால் உலக நாடுகள் கவலை

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய அவர், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்தார்.

வெளிநாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவியை அடுத்த 90 நாட்களுக்கு நிறுத்த உத்தரவிட்டு உள்ளார். வெளிநாடுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவியை உடனடியாக நிறுத்தவும், புதிய உதவி வழங்கவும் தடை செய்யப்பட்டு உள்ளது.

சுகாதாரம், கல்வி, மேம்பாடு, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு உதவி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா வழங்கி வந்த கோடிக்கணக்கான நிதி உதவியை உடனடியாக நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருப்பதால், பல நாடுகள் கவலை அடைந்துள்ளன.

இந்த உதவியை தொடர்வதா, மாற்றியமைப்பதா அல்லது நிரந்தரமாக நிறுத்துவதா என்பது குறித்து 85 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Latest news