Tuesday, July 1, 2025

தெரியாமல் போட்ட ரிவர்ஸ் கியர் : 2 வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் கார் ஓன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது கார் ஓட்டுநர் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டதால் பின் பக்கமாக இருந்த சுவரை இடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த 20ம் தேதி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் சுவரின் தரம் குறித்தும், ஓட்டுனரின் அலட்சியப்போக்கு குறித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news