Wednesday, January 14, 2026

சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை 10 மணி அளவில் அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்தனர். இது தொடர்பாக சென்னை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 220 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினரும் இரவு முதலே குவிந்து வருவதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

Latest News