Thursday, January 15, 2026

துருக்கியில் பிரபல ஹோட்டலில் தீ விபத்து : 66 பேர் பலி

துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரபல கர்தல்காயா ஸ்கை ரிசார்ட்டில் உள்ள ஹோட்டலில் 238 விருந்தினர்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News