Wednesday, February 5, 2025

3 மணி நேரம் மட்டுமே அனுமதி : விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதித்த காவல்துறை

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில நிபந்தனைகளும் போடப்பட்டுள்ளது.

பரந்தூர் மக்களை சந்திக்க 2 இடங்களை போலீசார் பரிந்துரைத்துள்ள நிலையில், ஒரு இடத்தை தேர்வு செய்ய விஜய்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே த.வெ.க-வினர் பரந்தூர் செல்ல வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பரந்தூரில் த.வெ.க தலைவர் விஜய் இருக்க கூடாது.

பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட ஒன்பது கிராம மக்களை மட்டுமே சந்திக்க விஜய்க்கு அனுமதி.

திங்கட்கிழமை நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

Latest news